Thursday, November 4, 2010

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

*************************************

உங்கள் இல்லங்களில் தீப ஒளி மலரட்டும்

உங்கள் உள்ளங்களில் புன்னகை ஒலி பரவட்டும்

உங்கள் உறவுகளில் துன்ப இருள் ஒழியட்டும்

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...

இருள் என்னும் மாயை

ஒளி என்னும் தீயை கண்டால் ஓடும்

தீப திருநாள் என்றால்

இல்லங்களில் மகிழ்ச்சி கூடும் - இந்த

மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க

தீப திருநாள் நல்வாழ்த்துகள்...

வேற்றுமையில் ஒற்றுமை

வடக்கே இராம‍_இலக்குவனின் வரவு

தெற்கே நரகாசுரனின் பிறிவு - தீபாவளி.

தீபாவளிக்கு வடக்கே தெற்கே என காரணம் வேறு வேறு

இரண்டும் போதிக்கும் உண்மைகள் நூறு நூறு --தீபாவளி அன்று

அகல் விளக்கை மற்றும் ஏற்றாமல் - நாம்

அக விளக்கையும் ஏற்றுவோம்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...

என்றும் அன்புடன்..

VT


Wednesday, April 14, 2010

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!


தமிழ் புத்தாண்டு பிறக்கட்டும்
புதுவாழ்வு மலரட்டும்
பொருளதார நெருக்கடி மறையட்டும்
பல்தொழில் பெருகட்டும்
உலகெங்கும் அமைதி நிலவட்டும்
இறைவன் அனைவருக்கும் மகிழ்ச்சி அருளட்டும்
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

அன்புடன்,
VT.

Friday, February 20, 2009

Twinkle twinkle little star

Twinkle twinkle little star

Everyone likes to become super star

No one should have any war

Everyone needs peace more

 

Twinkle twinkle little star

Love is like a sugar

lovers should have understanding each other

otherwise love melts worry in the fire

So don’t feel life is bore  

to get success in your love

keep your dare more

-- VT

Thursday, February 19, 2009

வாழ்க்கை ஒரு எந்திரம்


வாழ்க்கை ஒரு எந்திரம் இந்த

உலகில் எதுவும் இல்லை நிரந்திரம்

பகுத்துண்டு வாழ சொல்லுது சாத்திரம் – நீ

பகுத்தறிவோடு வாழ்ந்தால் உன்

பெயரை சொல்லும் சரித்திரம்

வாழ்க்கை ஒரு எந்திரம் எந்த

சூழ்நிலையிலும் இழக்காதே உன் சுதந்திரம்

உலகில் யாரும் விரும்பார் தரித்திரம் – அது

போக்க நீ நீட்டிடு உன் உதவிக்கரம்

அன்பே சிவம் - இதுவாக இருக்க வேண்டும்

அனைவரின் தாரக மந்திரம்.

-- VT

Tuesday, February 17, 2009

Life

Life is crazy if you take

everything easy!

Life is happy if you forgive

others mistakes quickly!

Life is worthy if you do

service poor people kindly!

Life is smoothly if you treat

others very respectfully!

Life is pretty if you do

whatever hopefully!

Life is funny if you are

always be originally!

Life is successfully if you don’t

hurt others blindly!

Life is jolly if you share

your happiness with everyone friendly!

Life is lovely if husband and wife

bonded in romantically!

Life is brightly if you

have parents lovingly

Life is worthy always if you make

others happy!

Life is crazy if you take

everything easy!! 

Totally life means funny !!

-- VT

Saturday, February 14, 2009

தனிமை

தனிமை எனக்கு ஏகாந்தம்

அது தந்தது வேதாந்தம்.

தனிமை எனக்கு இனிமை - இதனால்

ஒவ்வொருனாலும் கிடைத்தது புதுமை. - என்னுள்

தானாக வளர்ந்தது பொறுமை.

ஏனோ தெரியவில்லை அகன்றது

இருள் என்னும் அறியாமை – இதற்கு

காரணம் ஒரு வேளை

தனிமை எனக்கு தந்த ஏகாந்தமும்

அது தந்தது வேதாந்தமோ !

--VT

தன்னம்பிக்கை :

தன் இருகைகளையும் நம்பாமல்

தன்னுள் வளர்க்கும் நம்பிக்கை – தன்னம்பிக்கை.!

தன் இலட்சியத்தின் தடைகற்களை

தகர்தெறிய தேவையான ஆயுதம் - தன்னம்பிக்கை. !

பாம்பு என்றால் படை நடுங்கும் - தன்னம்பிக்கை

இருந்தால் உன் மனோபலம் பெருகும் !

விதியை மதியால்

வெல்லாம் என்பார் – ஆனால்

மனோபலம் இருந்தால்

மனிதன் தனியாக

மாமலையையும் தகர்கலாம் !

ஏழுகடலையும் கடக்கலாம்!!

தண்ணிர் உற்றாமல்

மலராது மல்லிகை – நீயாக

வளர்க்காமல் பிறக்காத - நம்பிக்கை

தன்னம்பிக்கை !!

-- VT

 

காதல் :

தொட்டால் சுடாது என்று எண்ணி

தொட்டபின் (மனதை) சுடுவது காதல்.

-- VT


சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் சிறு பகுதி

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

     ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

     'நீ எங்கிருந்து வருகிறாய்?'

     'கடலிலிருந்து'

     'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

     'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை. 

     கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

     'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

     'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

     காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

 -- சுவாமி விவேகானந்தர்